யாழ்.பல்கலை மாணவர்களின் போராட்டத்தை அடுத்து அறிக்கையை மீள பெற்ற ஆசிரியர் சங்கம்


மாணவர்களின் போராட்டத்தை அடுத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது.

No comments