யாழில். நிலவும் மோசமான காலநிலை ; சென்னை திரும்பிய விமானம்


சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானம் யாழ்ப்பாணத்தில் நிலவும் மோசமான வானிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்காது,  மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது. 

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பி இருந்தது. 

குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது, 

No comments