மாவீரர் நாளுக்கு தடை கோரிய மானிப்பாய் , பலாலி பொலிஸாரின் மனுக்கள் நிராகரிப்பு


மாவீரர் வார நினைவேந்தலை மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தடை செய்யக்கோரி மானிப்பாய் பொலிஸாரால் தாக்கல் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை பலாலி பொலிஸாரினாலும் தமது பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மாவீரர் நாள் நினைவேந்தலை தடை செய்ய வேண்டும் என கோரிய மனுவும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை தெல்லிப்பளை மற்றும் அச்சுவேலி பொலிஸாரினால் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாவீரர் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுக்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

No comments