யாழில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி , சிகிச்சை பெற்று இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார் 

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியை சேர்ந்த நிலக்சன் (வயது 18) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். 

கடந்த 09ஆம் திகதி குறித்த இளைஞன் 14 வயது சிறுவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை யாழ்ப்பாணம் பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளானது. 

விபத்தில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் , யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சிறுவன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். 

No comments