பாதீட்டை குறை கூறுபவர்கள் தமது அரசியலுக்காகவே குறை கூறுகின்றனர்


எதிர்கட்சிகள் தமது சொந்த அரசியலுக்காக  தேர்தலை இலக்காகக் கொண்ட வரவு செலவு திட்டம் எனக் கூறுவது நியாயம் இல்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் தேர்தலை இலக்காகக் கொண்டதல்ல. வரப்போகும் ஜனாதிபதி தேர்தலை இலக்காகக் கொண்டு வரவு செலவு திட்டத்தில் சலுகைகளை வழங்கியிருக்கிறார் என சிலர் கூறுவதை அவர்களின் அரசியல் ரீதியான கருத்துக்களாகப் பார்க்கிறேன்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் மொத்த வருமானத்தில் துண்டு விழும் தொகை அதிகமாக இருப்பது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயம்.

ஆனால் அதனை நிவர்த்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் சாதகமான நிலைப்பாட்டை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.  

ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கிக் கொண்டிருந்தபோது நாட்டை தலைமையேற்று  மக்கள் பொருட்களுக்காக வரிசையில் நிற்காத நிலையை ஜனாதிபதி உருவாக்கி இருந்தார் என்றதன் அடிப்படையில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார். 

No comments