ஆனையிறவில் கஞ்சாவுடன் வவுனியா இளைஞன் கைது
ஆனையிறவு சோதனை சாவடியில் ஒரு தொகை கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
உடுத்துறை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கஞ்சா போதைப்பொருளை இளைஞன் கடத்தி செல்வதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , குறித்த மோட்டார் சைக்கிளை ஆனையிறவு சோதனை சாவடியில் இராணுவத்தினர் வழிமறித்து சோதனை நடத்திய போது , கஞ்சா மீட்கப்பட்டது.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்த இராணுவத்தினர் , கஞ்சாவுடன் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்ட இளைஞனையும் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் கஞ்சா என்பவற்றை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
Post a Comment