விஞ்ஞானி ஆவதே என் இலக்கு - யாழில் அதிக பெறுபேறு பெற்ற மாணவி தெரிவிப்பு


வெளியாகியுள்ள 2023ம் ஆண்டு  ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று, யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா சாதனை படைத்துள்ளார். 

குறித்த மாணவி 196 புள்ளிகளை பெற்றுள்ளார். அது தொடர்பில் மாணவி கருத்து தெரிவிக்கும் போது, எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும்  தெரிவித்தார்.

2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலையை சேர்ந்த  110மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.No comments