இஸ்ரேல் - ஹமாஸ் இன்றைய செய்திச் சுருக்கம்!!

1949 ஆண்டு பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு

  • காசா மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 2,808 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 10,859 பேர் காயமடைந்துள்ளதாகவும் காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவைரை 57 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,200 பேர் கயமடைந்துள்ளனர்.

  • ஹமாஸ் தாக்குதலில் இதுவரை 1,400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளனர்.

  • 24 மணிநேரத்திற்கும் குறைவான நீர், மின்சாரம் மற்றும் எரிபொருட்களே எஞ்சியிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

  • இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நோக்கி ரொக்கெட் தாக்குதல்களை ஹமாஸின் ஆயுதப் பிரிவு நடத்தியதாகக் கூறுகிறது.

  • ஈரான் மற்றும் லெபனானின் ஹெஸ்பொல்லா ஆகியவை எங்களின் விருப்பத்தைத் சோதிக்க வேண்டாம் என்று இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெட்டினியாகு எச்சரித்துள்ளார்.

  • இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஆறு பிரித்தானியக் குடிமக்கள் கொல்லப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

  • இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் தொடங்கியதில் இருந்து 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் 20க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் காயமடைந்துள்ளதாக பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் சிண்டிகேட் தெரிவித்துள்ளது.

  • அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இரண்டாவது தடவையாக இஸ்ரேலில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் ஆகியோருடன் சந்திப்புகளை நடத்தினார்.

  • ஹமாஸின் பயங்கரவாதத்திலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கான தனது உறுதியான ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டினார். இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அதன் குடிமக்களைப் பாதுகாக்கத் தேவையானதை வழங்குவதற்கான அமெரிக்க உறுதியை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

  • காசாவுக்கு ஆதரவாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் போராட்டக்காரர்கள் பேரணி நடத்தினர். காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்தக் கோரி பாலஸ்தீன எதிர்ப்பாளர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் பல நகரங்களின் தெருக்களில் பேரணி நடத்தினர்.

    ஹெப்ரோனில் இருந்து ரமல்லா வரை பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியவாறும், பதாகைகளை ஏந்தியவாறும், காசாவில் வசிப்பவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  • நெதன்யாகுவின் பேச்சில் எந்த மாற்றமும் இல்லை, அவர் போரை விரும்புகிறார்.
    இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட இன்றை பாலஸ்தீனியர்களின் நிலப்பரப்பு

No comments