அல்-குத்ஸ் மருத்துவமனையிலிருந்து அனைவரையும் வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு!!


வடக்கு காசாவில் உள்ள அல்-குத்ஸ் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த மருத்துவமனையில் 400-க்கும் கூடுதலான நோயாளிகள் உள்ளனர். புலம்பெயர்ந்த 12 ஆயிரம் மக்கள் உள்ளனர்.

அல் ஆலி மருத்துவமனையில் நடந்த தாக்குதலை போன்று வேறு சம்பவம் நடந்து விடாமல் தடுக்கவும், அல்-குத்ஸ் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை பாதுகாக்க, அவர்களை வெளியேற்ற வேண்டும் என பாலஸ்தீனத்தின் செஞ்சிலுவை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதில், சர்வதேச சமூகம் உடனடியாக செயல்பட வேண்டும் என அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.


No comments