இஸ்தரப்பில் 700 பேர் பலி! பாலஸ்தீனியர் தரப்பில் 370 பேர் பலி!!


இஸ்ரேலில் - காசா மோதலில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2000க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேநேரம் காசாப் பகுதியில் இஸ்ரேல் நடத்திவரும் வான்வழித் தாக்குதலில் 370 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 2200 பேர் காயமடைந்தாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இஸ்ரேலில் நடந்த இசை நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமையன்று ஹமாஸ் போராளிகள் வான்வழியால் தரையிறங்கி அங்கிருந்து இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை  260 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.


No comments