யாழில். முகநூலில் வன்முறை கும்பல் தொடர்பில் பதிவிட்டவர் மீது வாள் வெட்டு


முகநூலில் தம்மை பற்றி பதிவிட்டவர் மீது வன்முறை கும்பல் ஒன்று  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. 

யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் மீதே அவரது வீட்டுக்கு அருகில் வைத்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 

வெள்ளைநிற கார் ஒன்றில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறை கும்பலே தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வன்முறை கும்பலாக அடையாளம் காணப்பட்டுள்ள கும்பல் ஒன்றே தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குறித்த கும்பலை பற்றி தனது முகநூலில் தாக்குதலுக்கு இலக்கான நபர் பதிவிட்டு இருந்த நிலையிலையே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

No comments