50 பிணைக் கைதிகளை இஸ்ரேல் கொன்றுவிட்டது - ஹமாஸ்


இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அறிவிக்கப்படாதவரை பணயக்கைதிகளை விடுவிப்பது சாத்தியம் இல்லை என்று ஹமாஸ் போராட்ட அமைப்பு அறிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பின் உயர் நிலை நிர்வாகப் போாளிகள் ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளனர்.

அத்துடன் காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் போராட்ட அமைப்பின் நிர்வாகி அபு ஹமித் மேலும் கருத்துரைத்துள்ளார்.

அத்துடன் காசாவில் இயங்கும் பல்வேறு ஆயுதக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை கண்டு பிடிக்க கால அவகாசம் தேவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவில் ஹமாஸ் தூதுக்குழுவை வரவழைத்து பேச்சு நடத்துவது இராஜதந்திரத்திற்கான ஒருவித தனிப் பாதையை உருவாக்குவதற்கான ஒரு வழியாகும்.

இந்த விடயத்தில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான போட்டியையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரஷ்ய தலைநகருக்கு ஹமாஸ் தூதுக்குழுவின் வருகையானது ரஷ்யா  மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஒரு முக்கியமான பாத்திரமாக உள்ளது என்றும் அறிவிக்க ஒரு வழியாகவும் பயன்படுத்துகின்றது.

No comments