சீன பேரம் முடிந்ததா?சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அண்மையில் இலங்கையுடன்  கடன்களை தீர்ப்பது தொடர்பான உடன்படிக்கையை எட்டியுள்ளதாக வெளியான நிலையில், இந்த உடன்படிக்கைகள் குறித்து இதுவரையில் தமக்கு எந்த அறிவிப்பும் அறிவிக்கப்படவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இன் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சீனா தொடர்பான கடன்களை நிவர்த்தி செய்வதற்கு சீனாவின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அண்மையில் இலங்கையுடன் ஆரம்ப உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை (11) செய்தி வெளியிட்டிருந்தது.

No comments