"ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்"
அகில இலங்கை சைவ மகா சபையுடன் யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை இணைந்து "ஒன்றே குலமாய் திருமந்திரம் காட்டும் அன்பே சிவத்திற்கு உயிர்கொடுப்போம்" எனும் தொனிப்பொருளில் நடாத்தும் திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமானது.
பரமேஸ்வரன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து திருமூலரின் உருவப்படம் தாங்கி வரப்பட்டு நிகழ்வு நடைபெறும் கைலாசபதி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது.
யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் சைவ சித்தாந்த துறைத்தலைவர் கலாநிதி பொன்னத்துரை சந்திரசேகரம் தலைமையில் நடைபெற்று வருகிறது.

.jpg)
.jpg)
.jpg)
Post a Comment