சிரியாவில் துருக்கியின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா


சிரியாவில் உள்ள தனது படைகளுக்கு அச்சுறுத்தலாக கருதப்பட்ட துருக்கிய ஆளில்லா விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தியதாக பென்டகன் கூறுகிறது.

துருக்கி அங்காராவில் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியால் (PKK) நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவில் குர்திஷ் படைகளை குறிவைத்ததில் துருக்கி வான் தாக்குதல்களை நடத்திவருகிறது.

ஒரு கிலோமீட்டர் (ஒரு மைலுக்கும் குறைவாக) ஹசாகாவுக்கு அருகிலுள்ள தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு வலையத்திற்கு அருகே அமெரிக்க படைத் தளத்திற்கு அருகே அச்சுறுத்தும் வகையில் ஆளில்லா விமானம் பறப்பில் ஈடுபட்ட அச்சுறுத்தியதால் எவ்-16 போர் விமானங்கள் தற்காப்புக்காக துருக்கியின் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வடக்கு ஈராக் மற்றும் சிரியாவில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா குர்திஸ்தான் படைகளுக்கு பயிற்சிகள் வழங்கி நவீன ஆயுதங்கள் கொடுத்து ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில் நேட்டோ நாடுகளின் உறுப்பினரான துருக்கியின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை நேட்டோ நட்பு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments