நீதி தேடி கொழும்பு செல்லும் சட்டத்தரணிகள்!முல்லைத்தீவு நீதிபதி இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது.

இந்நிலையில் 09ம் திகதி திங்கள் கிழமை அன்று கொழும்பு உயர்நீதிமன்ற முன்றலில் சட்டத்தரணிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு நீதிபதி அவர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, வடக்குக்கிழக்கு சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகள் இலங்கையின் அனைத்து சட்டத்தரணிகளையும் அழைத்து உயர்நீதிமன்ற  முன்றலில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்றை நடாத்த இருக்கின்றனர்.

வடக்குக் கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த பெருமளவிலான சட்டத்தரணிகளும் தென்பகுதியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இதனிடையே நீதி துறைக்கான சுதந்திரமும், சுயாதீன தன்மைக்களும் உறுதி செய்யப்படும் வரை பணிபுறக்கணிப்பில் ஈடுபடுவோம் என முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானம் மேற்கொண்டதாக முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் த.பரஞ்சோதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

அதற்கமைய நேற்று ஆரம்பித்த காலவரையறையின்றிய தொடர் நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது.


No comments