கதவடைப்பு:நல்ல நாள் இல்லையாம்!
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவிற்கு ஆதரவாக கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல காலத்திற்காக காத்திருக்கின்றமை அம்பலமாகியுள்ளது.
நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மனஅழுத்தம், காரணமாக நாட்டை விட்டு வெளியேறியதாக குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும் இதனை கண்டித்தும் கதவடைப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கூடிய தமிழ் கட்சிகள், யாழ்ப்பாண வர்த்தகர் சங்கம் உள்ளிட்ட வர்த்தகர் சங்கங்கள், பொது அமைப்புக்களுடன் கலந்துரையாடிய பின்னர் கதவடைப்பு போராட்டம் திகதி பற்றிய இறுதி திகதியை அறிவிப்பதாக, நேற்று முன்தினம் (6) ஊடகங்களிடம் பேசிய சட்டத்தரணி என்.சிறிகாந்தா தெரிவித்திருந்தார்.
எனினும், எதிர்வரும் 13 அன்று கதவடைப்பு போராட்டத்தை நடத்துவதற்கான முன்னாயத்தங்கள் நடந்து வந்த நிலையில் குறித்த திகதியில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ள நிலையில் 13ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவியதாக கதவடைப்பு நடத்தப்பட்டால் அது பாதிப்பையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தும் என்று அரசியல் தலைவர்கள் கருதுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment