யாரின் முகவர்??
தனது புலனாய்வாளர்களை சீன தூதரகம் வரை ஊடுருவ வைத்துள்ள அமெரிக்க தூதரக திறமை பற்றி கொழும்பு சிங்கள ஊடகங்கள் சில சிலாகித்துள்ளன.
74ஆவது சீன மக்கள் குடியரசின் உருவாக்க தின வரவேற்பு நிகழ்வு, கொழும்பு சங்கிரில்லா விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மகிந்த முதல் மைத்திரி ,சந்திரிகா மற்றும் டக்ளஸ் தேவானந்தா என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வில் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட நிலையில் இறுதி யுத்த காலத்தில் மக்களை மீட்க அமெரிக்க கப்பல் வருவதாக கதை விட்ட முன்னாள் போராளி ஒருவரும் பங்கெடுத்திருந்தார்.
இறுதி யுத்த காலப்பகுதியில் அமெரிக்க முகவரான அவர் பின்னர் சித்தார்த்தனின் புளொட் சகிதம் தமிழ் மக்கள் பேரவை என தனது பணிகளை சிறப்பாக கையாண்டவர்.
இந்நிலையில் சீன தூதரக முக்கியஸ்தராக அவர் கலந்து கொண்டமை அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.
அவர் தற்போது அமெரிக்க சார்பில் சீன நிகழ்வினுள் வந்தாரா அல்லது சீனா சார்பில் அமெரிக்க தூதரகத்தினுள் சென்றாராவென்ற கேள்வி எழுந்துள்ளது.
Post a Comment