தோற்றே போகும் இந்திய தூதரகம்!

 


தமிழ் தேசியம் சார்ந்த செயற்பாடுகளை முடக்கிவிட வடகிழக்கில் இந்திய அரசு முற்பட்டுள்ள நிலையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கொழும்பிலிருக்கையில் இந்திய அமைதிப்படையின் மனிதப்படுகொலைகள் இன்றும் யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டுள்ளது.

இந்திய படைகளால் அரங்கேற்றப்பட்ட கொக்குவில் பிரம்படி படுகொலையின் 36-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50க்கும் மேற்பட்ட பொது மக்களை கொடூரமாக இந்திய இராணுவம் படுகொலை செய்திருந்தது.

அந்நாளின் 36 வது நினைவு தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவுகளால் நினைவு கூரப்பட்டது.

படுகொலை அரங்கேறிய வீதியயோரமாக அமைந்துள்ள நினைவு தூபியில் சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

இத்தகைய இந்திய படுகொலை நினைவேந்தல்களை தடுக்க யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் செயற்பட்டுவருகின்றபோதும் யாழ்.போதனாவைத்தியசாலை படுகொலை என்பவை நினைவேந்தப்பட்டேவருகின்றது.


No comments