இந்திய தூதரக விளக்குமாறு தேய்ந்ததா?



இந்திய தூதுவராலயம்  கடந்த கால இருண்ட நாட்களை மூடிமறைத்துக்கொள்ள பகீரத பிரயத்தனங்களை முன்னெடுத்தாலும் அமைதிப்படை கால படுகொலை நினைவேந்தல்கள் தொடர்ந்த வண்ணமேயுள்ளது.

யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக்கல்லூரி படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் கல்லூரில் பிரதான வாயிலுக்கு அருகில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்படடுள்ளது.

1987ம் ஆண்டு இந்திய அமைதிப்படை யுத்த நடவடிக்கைகாலத்தில்  கொக்குவில் இந்துக்கல்லூரியில் அகதிகளாக அடைக்கலம் புகுந்திருந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

1987 ஆம் ஆண்டு ஒக்டோபர் 24ம் திகதி யாழ்ப்பாணம், கொக்குவில் இந்துக்கல்லூரியில் தஞ்சம் அடைந்திருந்த 50 க்கும் மேற்பட்ட பொதுமக்களை  இந்திய இராணுவத்தினர் படுகொலை செய்திருந்தனர்.

இதனிடையே மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் கடந்த 1987ம் ஆண்டின் அதே காலப்பகுதியில் இந்திய இராணுவத்தினரால் 11 பேர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 36 ஆவது நினைவு தினம் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்ட மக்களுக்கு இன்று வரை நீதி எதுவும் கிடைக்காத சூழ்நிலையில் தொடர்ந்தும்  நீதியை கேட்டு மக்கள்  போராடி கொண்டு இருக்கின்றார்கள்.இன்றை நாளில் நாங்கள் இவ்வாறு உயிரிழந்த மக்களுக்கு உரிய நீதி  கிடைக்கப்பெறும் வரை ஓயாது போராடிக்கொண்டு இருப்போம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சீனாவின் எரிபொருள் வர்த்தகம் வடக்கிலும் முனைப்பு பெற்றுள்ளது.

இம்மாத ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் சினோபெக் நிறுவனம் பெற்ரோல் விநியோகத்தை ஆரம்பித்திருந்த நிலையில் இன்று செவ்வாய்கிழமை  முதல்  சினோபெக்  ஒயில் வகைகளை அறிமுகம் செய்து  விநியோக முகவரை அறிமுகப்படுத்தியுள்ளது.


No comments