பிணைக் கைதிகள் இருவரை விடுவித்தது ஹமாஸ்


ஹமாஸ் அமைப்பினால் சிறைப்பிடிக்கப்பட்ட பிணைக் கைதிகளில் இரண்டு வயது முதிர்ந்த பெண்களை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்துள்ளனர்.

கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் கீழ் இவ்விரு பிணைக் கைதிகளும் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா டெலிகிராம் சேனலில் ஊடாக அறிவித்துள்ளார். 

மனிதாபிமான காரணங்களுக்காகவும் மோசமான சுகாதார காரணங்களுக்காகவும் இவ்விரு பெண்களையும் விடுவித்துள்ளோம் என்று ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் அபு ஒபேடா கூறினார்.

85 வயதான Yocheved Lifshitz மற்றும் 79 வயதான Nurit Cooper ஆகிய இரு பணயக்கைதிகளின் விடுதலை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் உறுதிப்படுத்தப்பட்டது.

இவ்விருவரும் விரைவில் அவர்களின் உறவினர்களிடம் திரும்பி வருவார்கள் என்று நம்புகிறோம் என்று எஸ்க் தளத்தில் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் பதிவிட்டுள்ளது.

அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது இஸ்ரேலியர்கள் மற்றும் இரட்டை குடிமக்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பிணைக் கைதிகளாக கடத்திச் சென்று தடுத்து வைத்துள்ளது.

No comments