அச்சுறுத்தும் அரச புலனாய்வுப்பிரிவு!
புத்தூர் கிழக்கில் வசிக்கும் பிள்ளையான் தர்மகுலசிங்கம் என்வரை சிவில் உடையில் சென்ற படையினர் என சந்தேகிப்பவர்கள் அச்சுறுத்தி வருவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிடப்பட்டுள்ளது.
ஒருபுறம் புலம்பெயர் தேசத்திலுள்ள தமிழ் மக்களிற்கு மலர்மாலையணிவித்து வரவேற்பதாக காண்பித்துக்கொண்டாலும் இன்னொரு புறம் குடும்பங்களை அச்சுறுத்திக்கொண்டிருப்பது புலம்பெயர் மக்களிடையே சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது
இதனிடையே கடந்த ஓகஸ்ட் 4ம் திகதியன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணத்தின் பிராந்திய அலுவலகத்தில் பி.தர்மகுலசிங்கம் உயிருக்கு அச்சுறுத்தல் குறித்து முறைப்பாடு செய்துள்ளதாக ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கை இராணுவம், தாம் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் எனவும், நாட்டிற்கு வெளியே உள்ள அவரது மகன் தர்மகுலசிங்கம் நிலாநிதன் என்பவரை தம்மிடம் கையளிக்க நிர்ப்பந்திப்பதாகவும் முறையிட்டுள்ளார்.
அவரது மகன் இலங்கை இராணுவத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பினார். இதையடுத்து, இராணுவ உளவுத்துறையினர் அவர்களது வீட்டில் சோதனை நடத்தி, சேகரிக்கப்பட்ட ஆதாரங்களை பறிமுதல் செய்தனர். மேலும், மோதலுக்குப் பிறகு, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தன்னை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு அழைத்ததாகவும், சித்திரவதைச் சம்பவங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்ச்சியான துன்புறுத்தல் அவரை 2015 இல் நாட்டை விட்டு வெளியேற வழிவகுத்தது. இருப்பினும், இராணுவ புலனாய்வுப் பிரிவினர் அவரது இல்லத்திற்குச் செல்வது நிறுத்தப்படவில்லை; மாறாக, கடந்த ஐந்து மாதங்களில் அவை தீவிரமடைந்துள்ளன.இராணுவ உளவுத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்கள் அவரது வீட்டிற்கு சென்று அச்சுறுத்துவதும் உடமைகளை சேதப்படுத்துவதும் தொடர்கின்றது. அத்தகைய அச்சம் மற்றும் நிச்சயமற்ற சூழல் அவரது மகன் இலங்கைக்குத் திரும்புவதைத் தடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே அத்தகைய சம்பவங்கள் அச்சுவேலி,ஆவரங்கால் மற்றும் புத்தூர் பகுதிகளில் தொடர்ந்தும் தலைதூக்கி வருவதாக தெரியவந்துள்ளது.
நாட்டை விட்டு வெளியேறியவர்கள் இலங்கைக்குள்ளேயே பதுங்கியிருப்பதாக தெரிவித்தே குடும்பங்கள் தொடர்ச்சியாக அழுத்தங்களை எதிர்கொள்வதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.
Post a Comment