ஆடை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து: 23 பேர் காயம்! 6 பேர் கவலைக்கிடம்!!
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ பரவியுள்ளது.
தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 8 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட நேரம் போராடி தற்போது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ காயங்களுடன் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 போின் நிலை கவரைக்கிடமாக உள்ளது.
தீ விபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment