மீதி இந்தியாவுக்கு விற்பனை!



வடக்கு கடலை கடல் அட்டை பண்ணைகளினை சீனாவுக்கு தாரைவார்த்துள்ள நிலையில் எஞ்சிய கடல் பகுதிகளை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்படவுள்ளது.

இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த நன்னீர் மீன் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, இறால் வளர்ப்பு, மட்டி வளர்ப்பு மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினர் ஒருவார காலமாக நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று ஆராய்ந்தது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் விளக்கமளித்தனர். 

இத்துறையில் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களை வரவேற்ற நிபுணர்கள் குழுவினர் மேலும் இத்துறையை மேம்படுத்துவதற்கும், தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும் தாம் பரிந்துரைகளை தயாரித்து வழங்குவதாகவும் தெரிவித்தனர். 

இக்கலந்துரையாடலின்போது  இலங்கைக்கான இந்திய உதவித் தூதுவர் சத்தியான்ஜல் பாண்டே அவர்களும் , இந்தியத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக துறைகளின் முதன்மைச் செயலாளர் தேவிகா லால் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இவர்களுடன் கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களான நாரா, நெக்டா, கடற்றொழில் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

No comments