மருத்துவமனைத் தாக்குதலுக்கு காரணம் மற்ற அணி: இஸ்ரேலுக்கு வெள்ளை அடிக்கும் ஜோ பைடன்


காசா மருத்துவமனை தாக்குதலுக்கு இஸ்ரேல் காரணம் அல்ல என்றும் இத்தாக்குதலுக்கு காசாவில் உள்ள அணி தான் காரணம் என்று இஸ்ரேலுக்கு வெள்ளை அடிக்கத் தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பிடென்.

அல்-அஹ்லி அரபு மருத்துவமனை குண்டுவெடிப்பு காரணம் இஸ்ரேல் இல்லை. இத்தாக்குதல் பிற குழுவால் செய்யப்பட்டதாகத் தெரிகிறது என்று பிடென் நெதன்யாகுவிடம் கூறுகிறார். அதன் பின்னணியில் பாலஸ்தீனிய ஆயுதப் பிரிவுகள் இருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இக்கருத்தை கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அதற்கான  எந்த ஒரு ஆதாரத்தையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு செவ்வாய்க்கிழமை காசா மருத்துவமனை தாக்குதலுக்கான காரணத்தை தங்கள் தேசிய பாதுகாப்புக் குழு விசாரிக்கும் என்று அமெரிக்கர்கள் கூறியபோது விரிவான விசாரணை இருக்கும் என்று உலகத்தில் பலர் நினைத்தனர்.

ஆனால், கொடிய தாக்குதலுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை ஜனாதிபதி பிடன் ஏற்கனவே முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.

அமெரிக்க அதிபரின் இஸ்ரேல் பயணம் என்பது இஸ்ரேலியர்களுக்கான ஆதரவின் குறிப்பிடத்தக்க காட்சியாகும். ஒரு தவறான ரொக்கெட் மருத்துவமனை படுகொலையை ஏற்படுத்தியது என்று வலியுறுத்துவதன் மூலம், பிடென் இஸ்ரேல் செய்யும் போர்க் குற்றங்களுக்கு வெள்ளை அடித்து தொடர்ந்தும் மனித குலத்திற்கு எதிரான போரை முன்னெடுக்க  பச்சைக் கொடியைக் காட்டியுள்ளார். 


No comments