வடமாகாண ஆளுநரை சந்தித்த பிரித்தானிய அமைச்சர்


வடமாகாணத்தின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாக பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலியன் (Anne marie Belinda Trevelyan) தெரிவித்துள்ளார். 

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுடன் யாழ்.நகரில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னரே பிரித்தானிய அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

 வடமாகாண மக்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அதனூடாக சிறந்த எதிர்காலம் காணப்படுகிறது.

வடமாகாணத்தின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்கும் பூரண ஆதரவை வழங்குவதாக பிரித்தானிய அமைச்சர் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பட்ரிக் (Andrew Patrick) அவர்களும் கலந்துகொண்டார்

No comments