பேருந்து மீது மரம் முறிந்து விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு


கொழும்பு,  கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டம் அருகில் பஸ் மீது மரம் விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் படுகாயமடைந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து தெனியாய நோக்கி பயணித்த பஸ் மீது கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சந்திக்கு அருகில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து காரணமாக பஸ்ஸில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பொலிஸாரும் விமானப்படையினரும் ஈடுபட்டனர்.

No comments