இஸ்ரேல் தாக்குதலில் இன்று 55 பாலஸ்தீனியர்கள் பலி!!


கடந்த அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் குறைந்தது 4,651 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் இயக்கத்தின் சுகாதார அமைச்சகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 1,873 குழந்தைகள் உள்ளடங்குகின்றனர். மேலும் 14,245 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 70% குழந்தைகள் மற்றும் பெண்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போது காசா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது தாக்குதல்களை அதிகரிக்கப்போவதாக நேற்று சனிக்கிழமை இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெனரல் டேனியல் ஹகாரி எச்சரித்தார்.  

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காசாப் பகுதியில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. 30 க்கு மேற்பட்ட வீடுகள் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன.

No comments