கொழும்பிற்குள் நுழைய 09 பேருக்கு தடை


துமிந்த நாகமுவ, ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் கொழும்பில் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் ஒன்றினை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையம் விடுத்ததாக கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் 9 ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments