தரைமட்டமாகும் காசா முனை!
இஸ்ரேல் - காசா மோதல்கள் இன்று மூன்றாவது நாளாகவும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
காசா முனைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் தெற்கு பகுதியான கர்மியா, அஷ்கிலோன், டிரோட் ஆகிய 3 நகரங்களில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், ஹமாஸ் போராளிகள் மற்றும் ஆயுதக் குழுக்கள் இடையே பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இஸ்ரேலில் ரஷ்யாவும் களமிறங்கும் என எச்சரிக்கை
இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் இடையிலான போரின் போது மூன்றாவது நாடு ஏதாவது இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கினால் ரஷ்யாவும் இஸ்ரேலுக்குள் களமிறங்கும் என ரஷயா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது பாலஸ்தீனத்திற்கு ஆரவாக லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு களமிறங்கினால் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தாக்குதலை நடத்தும் என்று கூறியிருந்தது.
அப்படி ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக தாக்குதலை அமெரிக்கா நடத்தினால் ஈரான் ஹிஸ்புல்லாவுக்கு ஆதரவாக களமிறங்க வாய்புள்ளது. அல்லது ஈரானுக்கு எதிராக தாக்குதல் நத்தினால் ரஷ்யா இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராக தாக்குதலை நடத்தும் என்பதை நேரடியாகச் சொல்லாம் மறைமுகமாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காசாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகம் தரைமட்டம்
காசாவில் இருந்து இஸ்லாமியப் பல்கலைக்கழகம் இன்று இஸ்ரேல் வான்படையினர் நடத்திய ஆறாவது தொடர் வான்தாக்குதலில் குண்டு வீசி தரைமட்டமாக்கப்பட்டது. அத்துடன் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டது.
நேற்று நள்ளிரவு மட்டும் காசாவுக்குள் 600 க்கு மேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிப்பு
காசாப் பகுதியில் உள்ள கமாஸின் இலக்குகளை மையப்படுத்தி இஸ்ரேலிய வான் படையின் மிக மூர்க்கத்தனமாக வான்வழித் தாக்குதலைகளை நடத்தினர். 35 தொடக்கம் 45 வரையிலான போர் விமானங்கள் காசாவின் 600 இலக்குகள் மீது இடைவெளி விட்டு நான்கு தடவைகள் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக இறந்துள்ளனர்.
காசா எல்லையில் எல்லையில் கைப்பற்றிய இஸ்ரேல் படைகள்
காசா எல்லைப்பகுதிகளை மீண்டும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக அறிவித்துள்ளது. காசாவின் நிலப்பரப்புக்குள் தரைவழித்தாக்குதல்களை நடத்துவதற்கு தயாராக 1 இலட்சம் படையினர் காசாமுனை எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன.
காசாவை முற்றுகையிட்டுப் தடை விதித்த இஸ்ரேல்
காசாப் பகுதியில் வாழும் 26 இலட்சம் மக்களுக்கு வழங்கப்பட்ட மின்சாரம், தண்ணீர், தொலைத் தொடர்பு, இன்ரநெட் வசதிகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளன. உணவு, எரிபொருள் கொண்டு செல்லுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. காசாவில் இயங்கிய வங்கி முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்டது.
பாலஸ்தீனியர்களுக்கான நிதியை முடக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
பாலஸ்தீனியர்களுக்கான உதவித் தொகையை ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியது. ஐரோப்பிய ஆணையம் பாலஸ்தீனியர்களுக்கு 691 மில்லியன் யூரோக்கள் ($728.66 மில்லியன்) மதிப்பிலான மேம்பாட்டு உதவிகளை வழங்கியுள்ளது.
இஸ்ரேலில் 9 அமெரிக்கர்கள் பலி!
இஸ்ரேலில் ஒன்பது அமெரிக்கர்கள் உயிரிழந்ததை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறோம். நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். எங்கள் இஸ்ரேலிய பங்காளிகளுடன் குறிப்பாக உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் 12 தாய்லாந்து நாட்டவர்கள் பலி!
இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் தாய்லாந்தை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 8 பேர் காயமடைந்தனர். மேலும், தங்கள் நாட்டினர் 12 பேரை ஹமாஸ் பயங்கரவாதிகள் பிணைகைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment