வல்வெட்டித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய 50 கிலோ கஞ்சா


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் சுமார் 50 கிலோ  கேரளா கஞ்சா நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  இரவு கைப்பற்றப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஊரிக்காடு கடற்கரைப் பகுதியில் மர்மபொதியொன்று இருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடாத்தப்பட்ட சோதனையின்போது கேரள கஞ்சா மீட்கப்பட்டது.

அதன் போது, எவரும் கைது செய்யப்படாத நிலையில் மீட்கப்பட்ட கஞ்சா வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த பொதி எவ்வாறு வந்திருக்கும் என்பது தொடர்பில் பல்வேறு கோணங்களிலும் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments