இன்றும் புகையிரத சேவைகள் இரத்து


ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினம் வியாழக்கிழமையும், முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்தியமையினால் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

பகிஷ்கரிப்பால் நேற்று முன்னெடுக்கப்படவிருந்த பல ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments