யாழில். கிராம சேவையாளரிடம் வழிப்பறி கொள்ளை


யாழ்ப்பாணத்தில் பெண் கிராம சேவையாளரிடம் இருந்து ஒரு இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவை வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வீதியில் பயணித்துக்கொண்டிருந்த  பெண் கிராம சேவையாளரின் கை பையில் , மோட்டார்சைக்கிள் வந்த இரு இளைஞர்கள் பறித்து சென்றுள்ளனர். 

கை பையினுள் இலட்சத்து 75ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பெறுமதியான கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றுடன் முக்கிய ஆவணங்கள் சிலவும் காணப்பட்டதாக கிராம சேவையாளர் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் கிராம சேவையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது 

No comments