முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் - அடுத்த கட்ட போராட்டம் ஹர்த்தால் ?


முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் அடுத்த கட்டம் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தமிழ் தேசிய கட்சிகளான 07 கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆராய்ந்துள்ளனர். 

அடுத்த கட்ட போராட்டமாக ஹார்த்தலை அறிவிப்போம் என சிலர் கருத்து தெரிவித்த போதிலும் , அது தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுத்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை அடுத்த கட்ட போராட்டம் தொடர்பிலான அறிவிப்பை அறிவிப்போம் என கூறி கூட்டத்தை நிறைவு செய்துள்ளனர். 

நீதிபதிக்கு நீதி கோரி நேற்றைய தினம் புதன்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments