பெறுமதி சேர் வரி அதிகரிப்பு
பெறுமதி சேர் வரி விகிதத்தை (வெட் வாி) 01.01.2024 முதல் 18 சதவீதமாக அதிகரிப்பதற்கான சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட வரி வசூல் இலக்குகளை அடைய முடியவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம், வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக இவ்வாறு வெட் வரியை அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அத்துடன் தற்போது வெட் வரியில் அடங்காத சில பொருட்கள் மற்றும் சேவைகளில் வரி விதிப்பது உள்ளிட்ட பல புதிய வரி முன்மொழிவுகளை 2024.01.01 முதல் நடைமுறைப்படுத்துவது தொடர்பான சட்டத் திருத்தங்களுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Post a Comment