யாழ்.போதனாவில் போதையில் அட்டகாசம் - இருவர் கைது
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நோயாளி ஒருவரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலை வளாகத்திற்குள் மது போதையில் அத்துமீறி நுழைந்த இருவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு வளாகத்துக்குள் உள்நுழைந்தனர்.
விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்
Post a Comment