யாழில். தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த மூதாட்டி உயிரிழப்பு


தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த மூதாட்டி திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பொலிகண்டி தெற்கைச் சேர்ந்த ஜெயேந்திரன் சோதிமலர் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார். 

மூதாட்டி நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென மயங்கிச் சரிந்துள்ளார்.

அதனை அடுத்து அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது , அவர் ஏற்கனவே  உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர். 

இந்நிலையில், உடற்கூற்றுப் பரிசோதனையில் மாரடைப்புக் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments