இரட்டை கொலை சந்தேகநபரின் மரணத்தை வெடி கொளுத்தி கொண்டாடிய பிரதேச மக்கள்
இரட்டை கொலை சம்பவத்தின் சந்தேகநபரின் உயிரிழப்பை பிரதேச மக்கள் வெடி கொளுத்தி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.
அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை கைவிலங்கினால் நெரிக்க முயற்சித்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாரிய குற்ற செயல்களுடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்த 22 வயதான கே.ஏ.மகேஷ் தனஞ்சய என்பவரே இவ்வாறு பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இவருடைய இறுதிக்கிரியைகள் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற போது, அவிசாவளை நகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 2 மணித்தியாலம் வெடி கொளுத்தி, மக்கள் மகிழ்ச்சியடைந்ததாக அவிசாவளை சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
Post a Comment