நீதி வேண்டும்: யாழ். போதனா வைத்தியசாலை முன் போராட்டம்


காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 7 வயதுச் சிறுமியின் இடது கையின் மணிக்கட்டுக்கு கீழான பகுதி சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தாதி உள்ளிட்ட அனைவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக்கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனு ஒன்றை கையளிப்பதற்காக பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments