6 நாளாகத் தொடரும் ஈருறுளி கவனயீர்ப்புப் போராட்டம்


தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 6ம்நாள்   பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய ஈருருளிப்பயணம் இன்று காலை 05.09.2023 அன்று லிமல் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி வாவ்ர் நாமூர் மற்றும் வன்சு மாநகர சபையில் தமிழர்களுடைய கோரிக்கை அடங்கிய மனு கையளிக்கப்பட்டது.  நேற்றைய நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடரும் தமிழின அழிப்பின வலி நிறைந்த பதிவுகளையும் அதற்கான நீதியினையும் வலியுறுத்தும் மனு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கான அரசியல் தீர்வு என்பதனை வலியுறுத்தி அறவழியில் ஈருருளிப்பயணத்தினை மேற்கொள்ளும் செயற்பாட்டாளர்களை அன்புடன் வரவேற்று,தமிழர்கள் என்ற உணர்வுடன் இறுகப்பற்றி இணைந்து பயணிக்க அன்புரிமையுடன் அழைக்கிறோம். 


No comments