முன்னாள் வாக்னர் தளபதி ட்ரோஷே மற்றும் புடின் சந்திப்பு


ரஷ்ய அதிபர் புடின் வாக்னர் தன்னார்வ படையின் முன்னாள் தளபதியான ஆண்ட்ரி ட்ரோஷேவை சந்திப்பை நடத்தியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரேம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.

உக்ரைன் போரில் தன்னார்வப் படைகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்ற ன என்பது குறித்து விவாதிக்க அழைக்கப்பட்டிருந்தார். அத்துடன் அவர் தன்னார்வப் படைகளை மேற்பார்வையிடுவது குறித்தும் சந்திப்பில் பேசப்பட்டுள்ளது.

ஆண்ட்ரி ட்ரோஷே தற்போது ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சத்தில் பணி புரிகிறார். அவரை ரஷ்ய மொழியில் "Sedoi" அல்லது "நரை முடி" என்று அழைக்கப்படுகிறார்.

No comments