தீலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்: யாழ்.பல்கலைக்கழகம்


தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் ஆரம்நாள் திலீபன் கல்வி கற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் இன்று மதியம் 12:30 மணயிளவில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது.

இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக தியாகதீபத்தின்  தியாக வரலாற்று பேருரை முன்னெடுக்கப்பட்டு தொடர்ச்சியாக மலரஞ்சலி செலுத்தி ஈகைசுடர் மாணவர்களால் ஏற்றப்பட்டது.

இதன்பொழுது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் , பல்கலைக்கழக மாணவர்கள் ,கல்வி சாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


No comments