சுவிஸ் நாட்டினை அண்மிக்கின்றது மனித நேய ஈருறுளிப்பயணம்


14ம் நாளாக தொடரும் மனித நேய ஈருறுளிப்பயணம் சுவிஸ் நாட்டினை அண்மிக்கின்றது.

13/09/2023 காலை முலூஸ் மாநகர சபை முன்றலில் அகவணக்கத்தோடு  ஆரம்பித்த மனிதநேய ஈருறுளிப்பயணம்

நேற்று பிரான்சில்  முலூஸ் மாநகரசபைகளிலும்  தமிழர்களுடைய நியாயமான கோரிக்கை அடங்கிய மனுக்களைக் கையளித்திருந்தது,

நேற்று 12/09/2022  வித்தனைம், கிங்கர்சைம் , முல்கவுசு போன்ற மாநகரசபைகளில் முக்கிய அரசியற் சந்திப்புக்கள் நடத்தப்பட்டது. சிறிலங்கா பேரினவாத அரசின் பொய் முகத்திரை கிழிக்கப்படுவது மாத்திரமின்றி திட்டமிட்டு தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைக்காக அரசியல் முன்னெடுப்புக்கள் முக்கிய பங்காற்றுகின்றன. 

27 தடவையாக தொடரும் அறவழிப்போராட்டத்தின் தொடர்ச்சியினையும் இவ்விரு மாநகரசபைகளும் நன்கு அறிந்திருந்த நிலையில், தொடர் போராட்டத்தின் பலனாக மிக உறுதியான நம்பிக்கை வாக்குறுதிகளும் தரப்பட்டன. குறிப்பாக தாம் பிரான்சு நாட்டின் வெளி நாட்டமைச்சிற்கும் அரச அதிபருக்கும் இதுவரை தமிழர்கள் நிலை சார்ந்து அனுப்பிய கடிதங்கள் மற்றும் இம்முறை இறுதியாக அனுப்பிய கடிதங்கள் போன்றவற்றை மனித நேய ஈருருளிப்போராட்டம் மேற்கொள்வோரிடம் சமர்ப்பித்தனர்.

தொடர்ந்தும் எமது போராட்டம் எழுச்சியோடு பயணிப்பது கண்டு மெச்சிக்கொண்ட முதல்வர்கள் சிறிலங்கா பேரினவாத சர்வாதிகார அரசு தமிழின அழிப்பிற்கு பொறுப்புக்கூறும் வகையில் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் நீதி விசாரணைக்கு முகம் கொடுக்க வேண்டும், அதற்கு தாமும் ஆவன செய்வதோடு அல்சாசு மாநிலம் தமிழர்களின் போராட்டங்களுக்கு நிச்சயம் ஆதரவு நல்கும் எனவும் கூறப்பட்டது.

No comments