ஓயாத அமைச்சர்:டக்ளஸ் வேட்டுக்கள்!

 யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் நடைபெறும் சட்டவிரோத மண் கடத்தலை தடுக்க நூறாவது தடவையாக அரச அமைச்சர் டக்ளஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



சட்டவிரோத மண் அகழ்வில்  இலங்கை காவல்துறை மற்றும் படையினர் பின்னணியாகவுள்ள நிலையில் அரச அமைச்சரது உத்தரவு கண்டுகொள்ளப்படுவதில்லை.

மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத விடயங்களை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

யாழ் குடா நாட்டில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் கடத்தல், கால்நடைகள் கடத்தல் ஏனைய சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம்,  செயலகத்தில், கடற்தொழில் அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.


No comments