யாழில். அயல் வீட்டில் இருந்து மின்சாரம் எடுத்ததால், வீடெரிந்து நாசம்!


அயல் வீட்டில் இருந்து சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த வீட்டாரின் வீட்டில் மின் ஒழுக்கு ஏற்பட்டு , வீடு எரிந்து நாசமாகியுள்ளது. 

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வசாவிளான் சுதந்திர புரம் பகுதியில் உள்ள வீடொன்றிலையே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. 

குறித்த வீட்டுக்கு , மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில் , அந்த வீட்டில் வசித்து வந்த இளம் குடும்பம் ஒன்றுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்ததால் , அயல் வீட்டார் உதவும் நோக்குடன் மின்சாரத்தை தமது வீட்டில் இருந்து வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

வீட்டில் நேற்றைய தினம் யாரும் இல்லாத நேரத்தில் வீடு திடீரென தீ பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த பெறுமதியான பொருட்களும் , முக்கிய ஆவணங்களும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. 

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். No comments