சரணடைந்தவர்கள் கொல்லபட்டனர்:விநோ!
சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்துள்ளனர்.அத்தகைய புதைகுழியினையே கொக்குத்தொடுவாயில் காணக்கூடியதாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் போராட்டம் ஒன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது சர்வதேச நியமங்களின் பிரகாரம் அகழப்பட வேண்டும், போர்க்குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்கள் சர்வதேச பொறிமுறையின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும்.
இறுதிப் போரில் அனைவரும் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தார்கள் சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பு தருகின்றோம். உங்களை நல்ல வாழ்கைக்கு கொண்டு செல்கின்றோம். நீங்கள் எங்களிடம் சரணடையுங்கள். என்று ஒலிபெருக்கி மூலம் இறுதி போர்க்கால பகுதியில் அறிவித்துவிட்டு சரணடைந்தவர்களை படுமோசமாக கொலை செய்துவிட்டு குழி தோண்டி புதைத்துள்ளனர்.
அவ்வாறு புதைக்கப்பட்டவர்களையே கொக்குத்தொடுவாயில் எச்சங்களாக மீட்கமுடிகின்றதெனவும் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
Post a Comment