போதைப்பொருளுடன் அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவினர்!ஐக்கிய மக்கள் சக்தியின் மொனராகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம் தர்மசேனவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் உட்பட மூவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும்,  41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஏனைய சந்தேகநபர்கள் இருவரும் 31 மற்றும் 39 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தபோதே, 810 கிராம் கஞ்சாவுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments