களவாக காணி கொடுத்த முன்னாள் ஆளுநர்!யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் முப்படையினரின் முகாம்களின் பாவனைக்காக 124 இடங்கள் கோரப்படுவதாக  உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நிலைகொண்டுள்ள படையினர் மற்றும் பொலிசார் தமது இருப்பிற்காக அல்லது நிரந்தர படை முகாம்களிற்காகவே இந்த இடங்கள் கோரப்படுகின்றது.

இவ்வாறு கோரப்படுத் 124 இடங்களில் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் 03 இடங்களும், தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் 07 இடங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரவில் 17 இடங்களும், சாவகச்சேரியில் 16 இடங்களும் .

ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவிலே 09 இடங்களும் கோரப்படுகின்றது.

இதேபோன்று யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவில் 15 இடங்கள் கோரப்படும் அதேநேரம் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் இருந்து 34 இடங்கள் கோரப்படுகின்றது. நெடுந்தீவில் 11 இடங்களும்,  சங்காணை மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா இரண்டு இடங்களுடன் உடுவிலில் ஒரு இடமும், சண்டிலிப்பாய் 03, கோப்பாயில் 06 இடமுமாகவே இந்த 124 இடங்களும் கோரப்படுகின்றது.

இவ்வாறு கோரப்படும் 124 இடங்களில் அதிக பட்சமாக கடற்படையினரால் 54 இடங்கள் கோரப்படுவதோடு இராணுவத்தினரால் 43 இடங்கள் கோரப்படுகின்றன. இதேபோல் விமானப் படையினரால் ஒரு இடம்  கோரப்படுவதோடு பொலிசாரினாலும்  21  இடங்கள் கோரும் நிலையில் எந்தப் பிரிவினருக்கு எனத் தெரியாதும் 05 இடங்கள் கோரப்படுகின்றது.

இதேநேர் இவ்வாறு முப்படையினராலும் கோரப்படும் 3,214 ஏக்கரில் விமானப் படையினர் 1,010 ஏக்கர் நிலத்தையும், இராணுவத்தினர் 1,759 ஏக்கரையும் கடற்படையினர் 414 ஏக்கரும், பொலிசார் 41 ஏக்கரை் நிலப்பரப்பு என்ற அடிப்படையிலேயே யாழ்ப்பாணக் குடாநாட்டில் 3,214 ஏக்கர் நிலங்களை முப்படையினரும்  கோரி நிற்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் முப்படையினரும் கோரும் இந்த 3,214  ஏக்கர் நிலத்தில் 2,802 ஏக்கர் நிலம் தனியார் நிலங்களாகவும் 412 ஏக்கர் நிலம் அரச காணி என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இவ்வாறு  கோரப்படும் இடங்களிற்கு அப்பால் பல இடங்கள் முன்னர் இருந்த ஆளுநரினால் இரகசியமாக பாதுகாப்பு அமைச்சிற்கே பாரதீனப்படுத்தப்பட்டுள்ளமையும்  கண்டறியப்பட்டது.

No comments