ஜேர்மன் தேசிய கால்பந்து அணியின் பயிற்சியாளரான ஹன்சி ஃபிளிக் நீக்கம்


யேர்மனி தேசிய அணி பயிற்சியாளர் ஹன்சி ஃபிளிக் 4-1 என்ற கணக்கில் ஜப்பானுடன் நடந்த போட்டியில் அதிர்ச்சியூட்டும் தோல்விக்குப் பிறகு நீக்கப்பட்டார்.

தேசிய அணிக்கு இப்போது ஒரு புதிய உத்வேகம் தேவை என்ற கருத்தை யேர்மன் கால்பந்து சங்கம் பகிர்ந்து கொண்டுள்ளது என அதன் தலைவர் பெர்ன்ட் நியூன்டார்ஃப் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். 

2024 ஆண்டு ஐரோப்பிய கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் எங்களுக்கு உற்சாகமான மனநிலையும் பார்வையும் தேவை என்று குறிப்பிட்டார்.

2021 ஆம் ஆண்டில் உலகக் கோப்பை வென்ற பயிற்சியாளர் ஜோச்சிம் லோவிடம் இருந்து பொறுப்பேற்ற ஃபிளிக். கத்தாரில் நடந்த உலகக் கோப்பை பிரச்சாரத்தின்போது எல்ஜிபிகியூ வுக்கு ஆதரவாக  மேற்பார்வையிட்டார் அத்துடன் கட்டாரில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் ஆரம்ப நிலையில் படுதோல்வியை  யேர்மனி அடைந்தது. 

உலகக் கோப்பைக்குப் பிறகு யேர்மனியின் விளையாட்டில் சரிவு தொடர்ந்தது. யேர்மனி தனது கடைசி ஐந்து ஆட்டங்களில் நான்கில் தோல்வியடைந்தது மற்றும் மார்ச் முதல் வெற்றியைப் பதிவு செய்யத் தவறியது.

தனது முதல் எட்டு ஆட்டங்களில் வெற்றி பெற்ற ஹன்சி ஃபிளிக், அடுத்த 17 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்றார். 1926 ஆம் ஆண்டில் பயிற்சியாளர் பாத்திரம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து நீக்கப்பட்ட முதல் யேர்மனி பயிற்சியாளர் இவராவார்.

டோர்ட்முண்டில் பிரான்ஸுக்கு எதிராக செவ்வாய்கிழமை நடக்கும் நட்பு ஆட்டத்திற்கு யேர்மன் தேசிய அணியின் இயக்குனர் ரூடி வொல்லர் தானே தலைமை தாங்குவார். விரைவில் புதிய பயிற்சியாளர் தெரிவு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.

No comments