கொக்கிளாய்:சரணடைந்தவர்களது புதைகுழியா?சர்ச்சைக்குரிய கொக்கிளாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது நாளையும் தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது இன்றையதினம் இடம்பெற்ற போது ஏற்கனவே தோண்டப்பட்ட புதை குழியிலுள்ள மண் வெளியே எடுக்கப்பட்ட நிலையில் முக்கியமாக தொல்பொருள் பிரிவினால் அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது.அப் பணியானது நாளையும் தொடருமெனவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே  புதைகுழியில் காணப்பட்ட எழும்புக்கூடுகள் அனைத்தும் கை கால்கள் சப்பாத்து நூல்களாலும், இடுப்புப்பட்டியினாலும் கட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததனை அகழ்வுப்பணியிலே காணமுடிந்தது.

மன்னாரில் ஒரு வருடம் இரண்டு வருடம் என கடத்தி செல்வது போல இங்கு கடத்த வேண்டாம் எமக்கு மூன்று மாதத்திற்குள் உடனே பதில்வேண்டும்.மூன்று மாதத்திற்குள் அகழ்வு பணியினை முடித்து எமக்கு பதில் வழங்க வேண்டுமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்கள் தெரிவித்துள்ளன.

புதைக்கப்பட்ட இடம் பெரிய இராணுவ முகாம் அமைந்திருந்தது.அத்துடன் மண்மேடுகளால் உயர்த்தப்பட்ட இடமாக இருந்ததுடன் ; அந்த இடத்திற்கு யாரையும் வரவிடாதபடி பின்வீதியாலே பயணம் செய்ய அனுமதித்தமை பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.


No comments